Friday 6 September 2019

படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY

                   
Fungal infection-spmadhu.blogspot.com


                   
spmadhu.blogspot.com
 'வட்ட வட்டமாய் படர்தாமரை ,அரிப்பு,வெளியே செல்ல சங்கடமாய் உள்ளது.முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிகிறேன்'  என்பவரா நீங்கள் ?கையை எடுக்காமல் சொறிகிறேன் ,வேர்க்கும்பொழுது மிகவும் பாடாய் உள்ளது.'அந்த இடத்தில்' கூட விட்டுவைக்கவில்லை என புலம்புகிறீர்களா ?ஹோமியோபதி மருந்து எடுத்து
பாருங்கள்.மேற்சொன்ன அறிகுறிகளையெல்லாம் சேர்த்து Fungal infections என்பார்கள்.பங்கஸ் என்பது பாக்டீரியா, வைரஸ் போன்றது.நுண்ணியிர் (Microorganism ) வகையில் வரும்.இதன் தோத்து தான் Fungal infection.வட்ட வட்ட வடிவத்தில் வருவதனால் இதனை Ringworm என்றும் அழைப்பார்கள்.மருத்துவ மொழியில் சொன்னால் 'Tinea'.

                     


                      வட்ட வட்டமாக தலையில் வந்தால் Tinea capitis என்பார்கள்.அரிப்பு, வறண்ட தோல்,முடி உதிர்தல், தோல் உரிதல்,சில பேருக்கு தண்ணிர் போல் வடிவது இப்படியெல்லாம் இருக்கும்.இதை பொடுகு என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

Tinea cruruis-padarthaamarai-spmadhu.blogspot.com

                      சிலருக்கு அந்தரங்க இடத்தில், தொடைகளின் உட்புறத்தில் அரிப்பு போன்று தொடங்கி கருப்பு படையாக   வளர்ந்துவரும்.இதன் பெயர் Tinea cruris.இதுவும் உள்ளாடை போட விடாமல் அரிப்பெடுக்கும்.விடாமல் சொரிய எரிச்சல் வரும்.குளிர்ந்த தண்ணீர் பட்டால் பயங்கர எரிச்சல், காந்தல் இருக்கும்.

Tinea pedis-arippu-spmadhu.blogspot.com

                      கால் நகங்களில்,விரல் இடுக்குகளில் வெள்ளை வெள்ளையாக தோல் உரியும்.இது தான் Tinea pedis. ஷூஸ் அணிபவர்களுக்கு இன்னும் அதிகமான தொந்தரவு தரும்.சேற்று புண்ணோடு இதனை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

Onychomycosis-spmadhu.blogspot.com

                     கை விரல்களில் கூட Fungal infection வரலாம்.அதனை Onychomycosis என்பார்கள்.நகங்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படும்.

padarthaamarai-fungal-spmadhu.blogspot.com

                     பொதுவாக வேறு எந்த பாகங்களை பாதித்தாலும் அதனை Tinea corporis என்று அழைப்பார்கள்.

Ringworm-homoeopathy-spmadhu.blogspot.com

                      ஹோமியோபதி இது எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுள்ளது.உங்கள் ஹோமியோ மருத்துவர் உங்களுக்கு இனிப்பாக இருக்கக்கூடிய மாத்திரைகளை தருவார்.அல்லது பொடி மருந்து,தண்ணீரில் கலந்து சாப்பிடுவது போன்றவற்றை தரலாம்.தேவைப்பட்டால், படர்தாமரையின் மேல் தடவக்கூடிய டிங்சர்(Tincture), oinments போன்றவை தரலாம்.இதை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வர இதிலிருந்து பூரண குணம் கிடைக்கும்.

                    Fungal infections எதனால் வருகிறது என்று பார்த்தோமானால்,

  • ஒன்று, நேரடியாக இன்பெக்க்ஷன் உள்ளவரிடம் தொடர்புக் கொள்ளுதல்.அதாவது அவர் உபயோகித்த துண்டு, சோப்பு, சீப்பு போன்றவற்றை பயன்படுத்தினால் பரவலாம்.
  • இரண்டு, நம் உடம்பில் இயற்க்கையாக இருக்கக்கூடிய Fungi பெருகி நம் நோயெதிர்ப்பு சக்தியால் சமாளிக்கமுடியாமல் வரலாம்.
  • பின் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது எளிதில் பரவும்.
  • உடல் பருமன் உள்ளவர்கள், அதிகம் வேர்வை தொந்தரவு உள்ளவர்களுக்கு சீக்கிரம் வரும்.
  • ஆன்டிபையாடிக்ஸ்  அதிகம் எடுப்பவர்களுக்கு கூட இது வரலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
                 
Leucoorhoea-itching-spmadhu.blogspot.com

                   பெண்களுக்கு வெள்ளைப் படுத்தல் போன்ற பிரச்சனைகளும் இதில் அடங்கும்.Vaginal  Candidiasis என்று அழைப்போம்.அது தம்பதிகளிடையே மற்றவர்க்கும் பரவும் வாய்ப்பு உள்ளது.இவற்றிலிருந்து எல்லாம் எப்படி பாதுகாத்துக்கொள்வது என பாப்போம்.
  • உங்களுக்கென்று தனியே துண்டு, சீப்பு, சோப்பு , போர்வை, போன்றவைகளை வைத்துக்கொள்ளுங்கள்.முடிந்த வரை அடுத்தவர்களுடையதை பயன்படுத்தாதீர்கள்.
  • வெறும் காலோடு நடப்பதை தவிர்க்கவும்.
  • மிகவும் டைட் ஆன இழுத்து பிடிக்கும் ஆடைகள் வேண்டாம்.பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.முக்கியமாக வெயில் காலங்களில்.
  • படர்தாமரை வந்த இடங்கள்,மற்றும் அந்தரங்க இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • சர்க்கரை நோய் ,சுகர் உள்ளவர்கள் அதனை குறைவான அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.வேறு வழியில்லை .சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,எரிச்சல், இதெல்லாம் சர்க்கரை அதிகமாகும் பொழுது கூடும்.அதன் காரணம் இதுதான்.
  • துணிகளை வெயிலில் காய வையுங்கள்.இது என் தனிப்பட்ட அறிவுரை .
  • முடிந்த வரை சீக்கிரமாக வைத்தியத்திற்கான முயற்சிகளை எடுங்கள்.முதல் சருமத்தின் மாற்றத்தை எப்போது பார்க்கிறீர்களோ அப்போவே !
தொடர்ந்து வாசியுங்கள் !உங்கள் சந்தேகங்களை கேட்க, ஆலோசனை பெற ,
prithivimadhuconsultation(at)gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளுங்கள்.விரைவில் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
இப்போது Youtube வீடியோ வடிவிலும் உங்களுக்காக !! லிங்கை கிளிக்குங்கள் .

1 comment:

  1. My daughter 10yrs has this fungal infection with blisters on it what shud I do during this quarantine period

    ReplyDelete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!