Sunday 12 April 2015

உன் குத்தமா?என் குத்தமா?யார நானும் குத்தம் சொல்ல?

                      அது ஒரு காலைவேளை வகுப்பு. எப்போதும் போல எல்லாரும் இயந்திரத்தனமாக வருவதும்  பாடம் நடத்துவதும்,போவதுமாக இருக்கும் நேரத்தில் ஒரு நெருடலான சம்பவம் அரங்கேறியது!

மாணவர்களை பிடிப்பது,தண்டனை கொடுப்பது,இதெல்லாம் சாதாரணமாக எல்லாக் கல்லூரிகளிலும் நடைபெறும் விஷயங்கள் தான்..என்றாலும் இம்முறை அது வேறொரு பாதைக்கு கொண்டு சென்றது!

                     சார் அவன் புத்தகத்தை விரித்து, வெகு நேரமாக  ஒரு  பக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.சற்று நேரம் கழித்து,சில வார்த்தைகளின் 'ஸ்பெல்லிங்' எழுதச் சொன்னார்.வேதனை என்னவென்றால்,அவன் எழுதியதில் அத்தனை பிழைகள்!!
சிறிது நேரத்திற்கு அங்கு ஒரு மயான அமைதி! 
பிறகு சார் அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.விசாரித்ததில் ,அவன் தமிழ் மீடியத்தில் படித்ததாகவும் அதனால் படிப்பில் சிரமம் உள்ளதாகவும் தெரியவந்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது!

                   
 இன்று,நாம் ஒரு' Film Award' என்ற பெயரில் எத்தனை செலவு செய்கிறோம்?ஒருமுறை ஒரு அரசியல்வாதி விசிட்டிற்கு வந்தால் அதன் விலை எவ்வளவு தாங்க வேண்டியதாய் உள்ளது? நம்ம ஊர்களில் வந்திறங்கியுள்ள ஜவுளிக்கடைகளின் மாத டர்ன் ஓவர் எத்தனை என தெரியுமா?இன்னைக்கு எத்தனை பேர் கைகளில் தேவை இல்லாமல் 'Smart phone' பவனி வருகிறது..இது இப்போது அவசியமா?

                  இப்படியெல்லாம் இஷ்டம் போல் வாழ்ந்தால் தானாகவே இந்தியா வல்லரசாகிவிடும் என்பது நம் அடி மனசில் இருக்கும் எண்ணம்.அப்படிதானே?
தனுஷ் ஒரு படத்தில் வசனம் பேசுவார்,"வேலைக்கு போய் கேட்டா நாலு வார்த்த சேர்ந்தா மாதிரி இங்கிலிஷ்ல பேச வரல ,என்ன மட்டும் ஏன் கான்வென்ட் ஸ்கூல் சேர்த்து படிக்கவைக்கள?" என்று. எல்லாரும் கான்வென்ட் ஸ்கூல் சேர்ந்து படிச்சாதான் இங்கிலிஷ்ல பேச வரும்னா எல்லாரும் அம்பானியா இருந்தாதான் முடியும்.ஏன் தமிழ் மீடியம்ல படிச்சா அது வரமாட்டேன் என்கிறது?இதுல யார்மேல தவறு??தரமான கல்வியை தர வேண்டிய பொறுப்பு யாருடையது?அன்னைக்கு அவனுக்கு சொல்லிகொடுத்த ஆசிரியை  தன் வேலையை முழுமையாக செய்திருந்தால் இன்னைக்கு இந்த அவமானம் வந்திருக்குமா?யோசித்து பார்க்கவேண்டும்.சக மாணவர்களுக்கு முன்னால் இந்த வயதில் ,ஒரு கல்லூரி மாணவன் எந்த மாதிரியான சங்கடங்களை அடைந்திருப்பான் என்று...!

                இன்றைக்கு ஒரு சினிமா படத்தை இத்தனை கோடி பட்ஜெட்கு எடுத்திர்கோம் என்பதை பெருமையாக சொல்லிகொண்டிருக்கும் வேளையில் ,மறுபுறம் அடிப்படை விஷயமே வேரறுந்து தொங்குதே! இதை யாரும் சட்டை செய்வது கூட இல்லையே!!??யாருக்காக இந்த வேஷம்?அட!வெளி நாட்டுகாரனுக்கு ஆயிரம் வேலைருக்கும்யா,அவனுக்கு குடும்பம்னே ஒன்னு கிடையாது.அவன் பேசிக்க வழியில்ல...சேரி!!  நமக்கு என்னத்துக்கு பேஸ்புக்கு ,வாட்ஸ்ஆப்பு ???

கொஞ்சம் திரும்பி பாருங்க.இன்னும் ரோட்ல பிச்சைகாரர்கள் பிச்சை எடுத்துகிட்டுதான் இருக்காங்க,ஆட்டோ ஓட்டுறவர் ஆட்டோதான் ஓடிட்டு இருக்கார்,பூ விக்குற அம்மா இன்னும் பூ தான் விக்குறாங்க.அவங்க வாழ்கைளலாம் ஒரு பெரிய மாற்றமோ வித்தியாசமோ வரலையே.நம்ம மட்டும் ஏன் கஷ்டப்பட்டு ஒரு கல்குலேடோர் டப்பாவை கையில வச்சி தட்டிட்டு நிக்கிறோம்?


தனிமனித ஒழுக்கமும் ,சமுதாய அக்கறையும் ,மனித நேயமும் இன்னைக்கு முக்காடு போட்டு ஒரு மூளைல உக்கார்ந்துட்டு இருக்கு. கான்வென்ட் ஸ்கூல்ல மட்டும் என்ன லக்க்ஷணம்? பத்தாங்கிளாஸ் பாடத்தை எட்டாவதிலிருந்தே படிக்க சொல்லுறாங்க..அப்போ ,ல்.கே.ஜி பாடத்தை கருவிலே படிக்க சொல்லுவன்களா??  

                         என் கவலையே எனக்கு பெரிய கவலையா இருக்கு.இதுல நான் எங்க அடுத்தவங்களுக்கு கவலை படறதுனு கேட்கலாம்.நியாயமான கேள்வி!முதலில் உங்க வேலைய ஒழுங்கா செயுங்க .அது போதும்!எல்லாரும் அவரவர் வேலையை ஒழுங்கா செய்திட்டாவே பாதி பிரச்னை தீரும்.இதுவே முதல் படியாக இருக்கட்டும் .ஏனென்றால்,உலகம் உருண்டைதான் இந்த நிமிடம்வரை.நாளைக்கு யாருக்கு வேண்டும் என்றாலும் எந்த நிலைமை வேணாலும் வரலாம்!