உன் குத்தமா?என் குத்தமா?யார நானும் குத்தம் சொல்ல?
அது ஒரு காலைவேளை வகுப்பு. எப்போதும் போல எல்லாரும் இயந்திரத்தனமாக வருவதும் பாடம் நடத்துவதும்,போவதுமாக இருக்கும் நேரத்தில் ஒரு நெருடலான சம்பவம் அரங்கேறியது! மாணவர்களை பிடிப்பது,தண்டனை கொடுப்பது,இதெல்லாம் சாதாரணமாக எல்லாக் கல்லூரிகளிலும் நடைபெறும் விஷயங்கள் தான்..என்றாலும் இம்முறை அது வேறொரு பாதைக்கு கொண்டு சென்றது! சார் அவன் புத்தகத்தை விரித்து, வெகு நேரமாக ஒரு பக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.சற்று நேரம் கழித்து,சில வார்த்தைகளின் 'ஸ்பெல்லிங்' எழுதச் சொன்னார்.வேதனை என்னவென்றால்,அவன் எழுதியதில் அத்தனை பிழைகள்!! சிறிது நேரத்திற்கு அங்கு ஒரு மயான அமைதி! பிறகு சார் அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.விசாரித்ததில் ,அவன் தமிழ் மீடியத்தில் படித்ததாகவும் அதனால் படிப்பில் சிரமம் உள்ளதாகவும் தெரியவந்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது! ...