வாயை மூடிப் பேசவும்!!
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களே!தயவுசெய்து அவரவர்களது மூக்கை அடுத்தவர்களது விஷயத்திற்குள் நுழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்!அது உங்களிடமே இருக்கட்டும்.அதுதான் அழகு!கொஞ்ச நாட்களாக இந்த 'மூக்கர்'களின் மூர்க்கமான தாக்குதல்களை என்னால் நன்கு உணர முடிகிறது. ஒரு குழந்தை சேட்டை செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் இருக்குமாயின்,அது 'நல்ல குழந்தை' என பெயர் வாங்கி விடுகிறது.அதுவே வளர வளர தாமாகவே வந்து,"நல்லா இருக்கீங்களா!வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?!"எனப் பார்க்கும் போதெல்லாம் விசாரணையைப் போட்டால்,'அக்மார்க் புள்ளடா நீ!' என்று அங்கீகாரம் பெற்று விடுகிறது!இது மனித இயல்புதான். 'If you compliment me,I feel you are good.' இதுவே சில வேளைகளில்,ஒரு ஊழல்உருக் கூட எடுப்பதுண்டு.'If you compliment me,I compliment you!'. எனவே,