பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble

                     
Worm trouble-spmadhu.blospot.com
                 
Worms-spmadhu.blogspot.com
பூச்சி தொந்தரவு-Worm Trouble எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.ஹோமியோபதியில் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.இவை ஒன்றுமில்லை...வித விதமான புழுக்கள்.கொஞ்சம் அருவருப்பாகத் தோன்றினாலும் அதுதான்.ஆமாம்.பாக்டீரியா, வைரஸ், போல இதுவும் நம் உடம்புக்குள் புகுந்துக்கொண்டு செய்யும் சேட்டையைத்தான் Worm Trouble, பூச்சிக்கடி, புழுச்சிக்கல்,குடல்புழுக்கள், புழு நெண்டுது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

                 

spmadhu.blogspot.com
முதலில் புழு கலங்கப்பட்ட நீர்நிலையிலோ, மண்ணிலோ, அந்த தண்ணீரில் செய்த சாப்பாட்டிலோ இருக்கும்.அங்கிருந்து நேராக குடலிற்கு சென்று குட்டி போட்டு வளரும்.பின் ஒவ்வொரு உறுப்பாக சென்று வியாதியை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு,திருப்பதி தேவஸ்தானம் சென்றால்,ஒரு காத்திருப்பு அறை தரப்படும்.சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்.பின்பு வரிசையில் மீண்டும் தொடர்ந்து சன்னதியை சென்றடைவோம்.

                   
Intestinal worms-spmadhu.blogspot.com
                 அதே மாதிரி இந்த புழுக்களும் உடம்பில் ஏதேனும் ஒரு வழியில் நுழைந்தப் பின்,குடலுக்கு சென்று வளர்ந்து பெருகும்.பிறகு,ஒவ்வொரு பாகமாக தாக்க தொடங்கும்.இதுதான் பொதுவான அதனுடைய வாழ்க்கை சுழற்சி.இதனால்தான் இதை குடல்புழு (Intestinal worms) என்கிறார்கள்.

                   நிறைய வகையான புழுக்கள் இருக்கின்றன.

THREADWORM
Threadworm-spmadhu.blogspot.com

PINWORM (ஊசிப்புழு)
Pinworm-spmadhu.blogspot.com

TAPEWORM (நாடாப்புழு)
Tapeworm-spmadhu.blogspot.com

WHIPWORM (சாட்டைப்புழு)
Whipworm-spmadhu.blogspot.com

HOOKWORM (கொக்கிப்புழு)
Hookworm-spmadhu.blogspot.com

ROUNDWORM(உருண்டைப்புழு)

Roundworm-spmadhu.blogspot.com

                 நம் வீட்டிலேயே குழந்தைகள் நாம் மட்டும் இருந்தால் ஒரு மாதிரி இருக்கும்.விருந்தாளிகள் வந்தால் வேறு  மாதிரி இருக்கும்.ஒன்று,அமைதியாகிவிடும் அல்லது அதிகம் வால்தனம் செய்யும்.அதே போல்தான்,நம் உடம்பிலும் 'புழு' என்கிற Foreign body, guest வந்தவுடன் நம் உடல் மக்கர் செய்ய ஆரம்பித்துவிடும்.பொதுவான அறிகுறிகள்,
Diarrhoea-spmadhu.blogspot.com

  • வயிறு வலி
  • வயிற்றுப்போக்கு 
  • வாந்தி 
  • கேஸ் 
  • ஆசனவாயில்அரிப்பு 
  • உடல் எடை குறைதல் 
  • இருமல் 
  • மூச்சுத்திணறல் 
               குழந்தைகளை அதிகம் குறிவைக்கும் புழு Enterobius vermicularis எனப்படும் ஊசிப்புழு(Pinworm).இது போன்ற புழுக்களை குழந்தையின் மலத்திலிருந்தே கண்டுபிடிக்கலாம்.'Stool examination' என்றொரு டெஸ்ட் உள்ளது.அதில் நுண்ணோக்கி (microscope) மூலம் அது எந்த வகை புழு என கண்டுப்பிடித்து சொல்வார்கள்.

             
Homoeopathy for worms-spmadhu.blogspot.com
                 ஹோமியோபதியில் இதற்கு  அருமையான மருந்துகள் உள்ளன.உதாரணத்திற்கு,சினா(Cina ) என்றொரு மருந்து உள்ளது.ஆசனவாயில் அரிப்பு,வயிற்றுப்போக்கு,குழந்தைகள் இனிப்பு நன்றாக சாப்பிடும் ஆனால் சாப்பாடு அவ்வளவாக சாப்பிடாது.அடம் பிடிக்கும்.தூங்கும்பொழுது பல் கடிக்கும்.திடீரென்று இரவில் கனவு கண்டு எழுந்து அழும்...இவையெல்லாம் 'சினா'வினுடைய அறிகுறிகள்.

                பெரியவர்களுக்கும் பூச்சிக்கடி வரும்.அதற்கும் ஹோமியோ மருந்துகள் இருக்கின்றன.ஆகையினால் இப்படி தொந்தரவுகள் வந்தால் எப்படி சொல்வது? என்ன செய்வது? என்று தெரியாமல் பூச்சிமாத்திரை எடுத்துக்கொண்டு இருக்காதீர்கள்.சீக்கிரமாகவே ஒரு நல்ல ஹோமியோ மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

உங்களுக்காகவே Youtube வீடியோ வடிவத்தில் .....
https://www.youtube.com/watch?v=XDQzOU3iCGA&t=3s
Please Subscribe my channel to get know about more videos.

              

Comments

Popular posts from this blog

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!

படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY