1.KICKSTARTER -HOMOEOPATHY WINS/ஹோமியோபதி இனிதே ஒரு தொடக்கம் !!
Before going into this I attach a special feature of this blog.for those who have extreme workloads and chota time to use blog I hereby attach you the audio format of what I have written.Enjoy Listening!! Follow the blog Crucifixion for more innovative posts!!
Homeopathy itself is a complete system of medicine for your note.It cures almost all kinds of diseases starting from common cold,fever,headache,arthritis,Life-style disorders -to- Cancer,diabetic foot ulcers,gangrene,stroke etc.Amazed!Right!This is true.And I am your witness.I have been studying this wonderful system of medicine since 7 years and I listed above only the cases whatever I have seen and experienced.
Homoeopathy is safer and its medicines are purely curative.which means no need to take any supplementary medicines along with the main course to control the side effects created by medicine.This is what we have been practised since many years by other treatment methods.And You are now free to take medicines without side effects in Homoeopathy.
spmadhu.blogspot.com |
Once You complete the course of medicines for a disease correctly through Homoeopathic treatment,I can assure you 99% of perfect cure.This means You won't get reccurent attacks of the same disease which you are suffering for many years.So It gives permanent cure.Think...You get renal stones and its reoccuring again and again.Just try Homoeopathic medicines.Follow the advices given by the Doctor .Amazingly,You'll be relieved completely from kidney stones.You won't get any more!You are free!How much relaxation you are getting while hearing this.You won't get intolerable lower abdomen pains or burning during urination.So this is the success of a medicine.Success of any treatment!This must be your major expectation while coming to a Doctor.Its possible through Homoeopathy.And YES !You are healed!
One of the basic principles behind Homoeopathy is the minimum dose.Let's just go with some eternal things.There is a physical body.You can see it,touch it,feel it etc.And there is a mental sphere ,you think,react,feel etc.Beyond this,you have something else which gives you LIFE.You can say Lifeforce,or an energy,or a spiritual body etc.If that electric current -like thing which circulates throughout your body stops for a while,you are dead!You will be called DEAD.Right!So you have a basic life force energy which is invisible,untouchable but its practical,essential.How?Because it offers you the name 'alive'.So this is called 'VITAL FORCE' by us.The basic vital energy prevalent in all living organisms .Getting it!
spmadhu.blogspot.com |
So Homoeopathy intends just to stimulate this vital force inside our body through Homoeopathic medicines.It says like this,'A Minimal amount of medicinal substance is enough to stimulate the diseased vital force inorder to get a natural cure'.If you get a disease ,your vital force is disturbed ,diseased.So Homoeopathic medicines stimulate or clears the vital force first.Later,our body cures itself with the help of this medicine.It acts as a catalyst here.Simple!
So,I would say Homoeopathic medicine as a 'KICK-STARTER'.Kick starter is a device to start an engine by pressing the pedal of a bike to start. Similiarly, Homoeopathic medicine allow our body to recover itself by only guiding it/helping it.
If you have a matured 18 year old child,you will guide him/her.You'll watch his/her activities without interuppting and help him at the right point where they need it.You won't hold his hands everytime he walks .Similiarly,Homoeopathic medicine handles our body from top to bottom clearing its cause of the disease inorder to cure.
So this minimum dose concept only, makes it Side-effectless medicine.Understand!We don't give crude form of drugs at any cost.We are potentising it and giving in minimum dose whatever the body requires.
spmadhu.blogspot.com |
See...If you take medicines for psychological problems,you put on weight in other Treatment methods.What's that?What is it due to?It is the effect of the sleeping doses and steroids which you have taken.Now You'll go for Obesity treatment.This is never ending. Whereas in Homoeopathy ,We don't create problems at the first level itself.Homoeopathy is especially safer for mind complaints.You'll get to know about this in detail in my future posts!!
Homoeopathy avoids Surgery.Its a great point.I will tell how.If you get a cyst you are adviced for a surgery.If you get a stone(Kidney or Gall bladder) ,you are adviced for a surgery.If you get a thyroid swelling,you are adviced to remove through surgery.If you get a fibroid uterus,go for a surgery.If you are getting a tumour!,then also you are adviced for a surgery.Why people?What's the need? I'll damn surely say there are Homoeopathic medicines for all these disorders in a better way! Internal medicines itself can clear out all these without surgery.Try it!
If you get a Hernia,go for Surgery.I myself will advice you.If you met with an accident and bleeding severely,go for it.I will open the door for you.But if you have cancer and go for surgery ,the cancer will spreads!If you have a Lipoma/cyst you for surgery ,you are fooled!This is reality.Basic thing what you need is Trust!It gives you success.
spmadhu.blogspot.com |
Next immediaite doubt which comes in our mind is that,how Homoeopathic medicines are prepared?From where it comes?Fine....Homoeopathic medicines has wide range of sources.It's not only from plant like what we thought upto this moment.It is prepared from animal source,from chemical source,mineral source,from healthy tissues,from unhealthy tissues,from x-rays,UV-rays,miscellaneous source etc.But I assure that they are the sweetest of all medicines.You can blindly give to your 3-year old daughter/son.She won't spit it.She won't cry before having it rather,She will love taking Homeopathic medicines.Its sweet in taste and you can consume it without the help of water.You have to chew it well so that the medicine go through the nerve endings of the tongue and quickly spreads to each and every diseased cell,tissues of your body.Eat like a chocolate.This is as simple as that :)
'Can I offer these medicines to children?' Ofcourse.Homoeopathy is very suitable to children(Pediatric) as well as old people(Geriatrics).Another thing You won't have much restrictions in this.If you take some traditional kind of treatments,you will have lots of food restrictions. Homoeopathy has none of it except for the case of coffee.Coffee,camphor smell,naphthalene ball smells antidotes the effect of homoeopathic medicines.
spmadhu.blogspot.com |
'Is it time-taking?' Definitely No.It's a myth that it takes time to cure.Time of cure depends on your body reaction and doctor's right remedy selection.Right remedy selection is based on how you respond to doctor's questions.I can give an example of my own cases.I had a female patient of middle-age suffering from itching in-between big toe and index toe.She suffered a lot that she didn't sleep at night.I inquired her whether she walked bare-foot? She said 'no'.OK..Is there any change of foot-wear? She said she started using canvas shoes(cut shoes which covers the whole leg) for walking since some few days.
Normally,if you use shoes for the first time,you can get shoe-bite like thing,eczemas,etc.'Silicea' is a Homoeopathic remedy for this problem.I gave her Silicea 30 only one dose(30 indicates potency of the medicine ) .Within half an hour she has control of the itch and slept well.The next day she called me and said she feels better.Then she didn't came for that complaint:)
So the time of cure is very fast when the complaint is acute.If you have a long-term complaint,it obviously take some time which is usual.So now the myth is cleared.We have fastest cure as well as the normal cure.It depends on the reactivity of the patient ,onset of complaints and co-operation of the patient.
So these are the pieces of information I wanted to share with you preliminary ,for why you have to take Homoeopathy. Follow my page and get more awareness on Homoeopathy, Unfold the myths, Choose the right treatment method. Choice is your's. See you soon :)
தமிழில் ....
ஹோமியோபதி ஒரு முழுமையான மருத்துவமுறை.எல்லா வகையான நோய்களையும் ,ஒரு காய்ச்சலில் தொடங்கி,தலைவலி,மூட்டுவலி தொந்தரவுகள் ,சர்க்கரை ,ரத்தகொதிப்பு முதல் கேன்சர்,தீர்க்க முடியாத புண்கள்,பக்கவாதம் வரை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இதனையெல்லாம் சரிசெய்து வருகிறது.கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இது நிதர்சனமான உண்மை !அதற்கு சாட்சி நான்.நான் இத்துறையில் நுழைந்து ஆறு வருடங்கள் போல் ஆகிறது.இதில் நான் பார்த்த ,உணர்ந்த பிரச்சனைகளின் ஒரு பகுதியே நான் மேலே உங்களுக்கு கூறியது.
ஹோமியோபதி ஒரு பாதுகாப்பான மருத்துவமுறை.நாம் காலம் காலமாக பழக்கப்பட்ட ஒரு வைத்தியமுறையை பற்றி சொல்கிறேன்.ரத்தகொதிப்புக்கு ஒரு மாத்திரை எடுத்தால்,அந்த மருந்தின் வீரியம் சிறுநீரகத்தை பாதிக்காமல் இருக்க வேறொரு மாத்திரை தரப்படும்.இந்த விளையாட்டே இங்கு இல்லை.ஹோமியோபதியில் உங்களுக்கான மருந்து மிகவும் ஆராய்ந்து தரப்படும்.அது உங்களின் மற்ற பாகங்களையும் சேர்த்து சரிசெய்யுமே தவிர யாதொரு தீங்கும் ஏற்படுத்தாது.
spmadhu.blogspot.com |
கொடுக்கப்பட்ட மருந்துகளை சரியாக எடுத்து முடித்த பின், நீங்கள் முற்றிலும் குணமடைகிறீர்கள்.இங்கு கவனிக்க வேண்டும்.'நீங்கள் சரியாகிவிடுவீர்கள் '-இது வேறு.'நீங்கள் முற்றிலும் குணமடைகிறீர்கள்'-இது வேறு.இந்த பத்தியின் இறுதியில் இதனை புரிந்துக்கொள்ள உங்களால் முடியும்.உங்களுக்கு சிறுநீரக கல் வருகிறது என வைத்து கொள்வோம்.அதற்கு ஹோமியோபதி மருத்துவம் எடுக்கிறீர்கள்.'நீங்கள் முற்றிலுமாக குணமடைகிறீர்கள்'.இதை கேட்கும்போது எத்துணை ஆனந்தம்.இனி அந்த வலியோ வேதனையோ இல்லை.இதே தருணத்தில் நீங்கள் வேறு ஒரு மருத்துவமுறையை அணுகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.'நீங்கள் சரியாகி விடுகிறீர்கள்'.இப்போதும் ஆனந்தம் தான் .ஒரு மூன்று மாதம் போகிறது.மீண்டும் வயிறு வலி,சிறுநீர் போகும்போது எரிச்சல்.அதே மருத்துவரிடம் போய் சொல்கிறீர்கள்.அடுத்த மருந்து பையை வாங்கி வருகிறீர்கள்.இங்கே ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறீர்கள்.இது எதனால் திரும்ப திரும்ப வருகிறது?ஏன் பூரணமாக குணமாகவில்லை ?ஏனென்றால்,மேலோட்டமான மருத்துவம் தரப்பட்டிருக்கிறது.நோயின் காரணி அகற்றப்படவில்லை.எந்த ஒரு பிரச்சனைக்கும் மூலக்காரணம் அறிந்தால் தான் தீர்வு கிடைக்கும்.ஹோமியோபதி உங்களையும் உங்கள் நோயையும் ,அது வந்ததன் ஆதி காரணத்தையும் ,எல்லாவற்றையும் அலசி மருந்து பரிந்துரைக்கும்.இதனால் இது நீடித்த குணத்தை தரமுடிகிறது.இப்போது புரிந்திருக்கும் முற்றிலும் குணமாவதன் ரகசியம் !
ஹோமியோபதியின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று 'குறைந்த அளவிலான மருந்து தருதல் '(அதாவது 'Minimum Dose').இப்போது நாம் நமக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை பற்றி பார்ப்போமே.நாம் காணும் நமக்கு ஒரு 'உடல்' உள்ளது.அதனை தொடமுடியும்,பார்க்க முடியும் ,உணர முடியும்.அதே போல் 'மனம்' என்றொன்று உள்ளது. இதனை உணர முடியும் ,யோசிக்க முடியும்,பகுத்தறிய முடியும்.இதனையெல்லாம் தாண்டி 'அதுக்கும் மேலே' என்று ஒன்று உள்ளதல்லவா.'அது' நமக்கு உயிர்தருகிறது.நம்மை உயிருள்ளவர் என்று அழைக்க ஆதாரமாய் இருக்கிறது.ஆன்மிகத்தில் 'ஆத்மா' என்பார்கள்.ஒரு 'ஆற்றல் ' அல்லது 'உயிர்' என்றொன்று நமக்கு அப்பாற்பட்டது.அது இந்த உடலில் இல்லையென்றால் நம்மை 'பிணம்' என்கிறார்கள்.அதை பார்க்கமுடியாது ஆனால் இன்றிமையாதது .அதை 'முக்கிய சக்தி ' (Vital force) என்று சொல்வார்கள்.இந்த அடிப்படை முக்கிய சக்தி எல்லா உயிரினங்களிலும் உண்டு.
Vital force-spmadhu.blogspot.com |
ஹோமியோபதியினுடைய வேலை இந்த முக்கிய சக்தியை தூண்டிவிடுவது .அதாவது,'ஒரு சிறிய அளவு வீரியமேற்றப்பட்ட மருந்தே முக்கிய சக்தியை தூண்ட போதுமானது.இதனைக்கொண்டு நம் உடல் நம்மை சரிசெய்துக் கொள்ளும்'.-இது விதி (எளிமையான முறையில்).ஒரு நோய் வரும்போது ,இந்த முக்கிய சக்தியானது சிறிது அதன் கோட்டிலிருந்து விலகுகிறது(deviates) துன்புறுகிறது (disturbed,diseased),இதனை தூண்டிவிட்டாலே போதும்,நம் உடல் நம்மை இயற்கையான முறையில் சரிசெய்து கொள்ளும்.ஹோமியோபதி மருந்து இதைத் தான் செய்கிறது.
spmadhu.blogspot.com |
ஒரு குழந்தை பதின்பருவத்திற்கு வருகிறது.அதனை நாம் கண்காணிப்போம்.தவறான பாதையில் செல்லும்போது தடுத்து நிறுத்துவோம்.மாறாக,கழுதை வயசானாலும் கையைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என பெற்றோர் சொன்னால் அவன் எல்லை மீறவே பார்ப்பான்.தெரியாமல் தவறு செய்வான்.பெற்றோருக்கு தெரியாமல்.அல்லது வெகுளியாக,விவரமில்லாமல் நடப்பான்.ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளை வழிநடத்துவது என்பது மட்டுமே செய்வது அவர்களின் மேல் நாம் காண்பிக்கும் மரியாதை.இல்லையென்றால் 'எம்டன் வந்துட்டான்னா ?' என்றுதான் ஓடுவான்.ஒன்னும் சொல்வதற்கு இல்லை.ஹோமியோபதி தன் உடலை தானே சரிசெய்துக் கொள்ள உதவியப்பின் வழிவிட்டு நிற்கிறது .அரக்கத்தனமான எந்த மருந்துகளும் எங்களிடம் இல்லை.அதனால்தான் அது பாதுகாப்பானது.
Psychology-spmadhu.blogspot.com |
இப்போது ஒரு மனநோய் வருகிறது.அல்லது ஒரு மனஅழுத்தம் (stress),மனசோர்வு (depression) வருகிறது என வைத்துக்கொள்வோம்.மனநல நிபுணரிடம் போகிறோம்.மருந்துகள் தரப்படுகிறது.கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஒரு நண்பர் உங்களை சந்திக்கிறார்.அவர் முதலில் என்ன உங்களிடம் கேட்பார்?(அவருக்கு நீங்கள் மனக்குழப்பத்தில் இருந்த விஷயமெல்லாம் தெரியாது) 'என்ன?ஆளே மாறிவிட்டாய் .ஜிம்முக்கு போ ' என்பார்.நீங்கள் அவ்வளவு எடை கூடியிருப்பீர்கள்.இது எதனால்?நீங்கள் சாப்பிட்ட ஸ்டெராய்ட்ஸ்,தூக்கமாத்திரைகள் எல்லாம் செய்த வேலை.இப்போது உடல் பருமன் குறைய வைத்தியம் எடுப்பீர்கள்.இது ஒரு தொடர் சங்கிலி வைத்தியம்.இதற்க்கு முடிவு கிடையாது.ஆனால்,ஹோமியோபதி இந்த எந்த சங்கடத்தையும் உங்களுக்கு கொடுக்காது.குறிப்பாக,ஹோமியோபதி மனநோய்களுக்கு மிக பாதுகாப்பானது.வரும் பதிவுகளில் இதை பற்றி நான் அதிகம் பகிர உள்ளேன்.
ஹோமியோபதியில் ஆப்பரேஷன்,அறுவை சிகிச்சை,கத்திக்குத்து இவையெல்லாம் கிடயாது.இது ஒரு அருமையான செய்தி.எப்படி என்று சொல்கிறேன்.இப்போது ஒரு கல் வருகிறது (சிறுநீரகத்திலோ /பித்தப்பையிலோ) என்று வைத்துக் கொள்வோமே.அறுவை சிகிச்சை செய்ய ஆலோசிக்கிறார்கள்.ஒரு தைராய்டு கட்டி வருகிறது ,அறுவை சிகிச்சை செய்து அகற்ற சொல்கிறார்கள்.ஒரு கர்பப்பை கட்டி வருகிறது ,அறுவை சிகிச்சை செய்து அகற்ற சொல்கிறார்கள்.ஒரு கேன்சர் கட்டி வருகிறது,அப்போதும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க படுகுகிறீர்கள்.ஏன் மக்களே ?எதற்க்காக நீங்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்? நான் ஆணித்தனமாக அடித்து சொல்லுவேன்,இவை எல்லாவற்றிற்கும் ஹோமியோபதி மருந்துகள் மூலமாகவே நல்ல தீர்வைக் காண முடியும் என்று.முயற்சி செய்து பாருங்கள் !
ஒரு ஹெர்னியா வருகிறது.அறுவை சிகிச்சைக்கு நானே பரிந்துரைப்பேன்.ஒரு மோசமான விபத்துக்கு உள்ளாகுகிறீர்கள்,தாராளமாக அறுவை சிகிச்சை செய்துக்க கொள்ளுங்கள்.ஆனால்,ஒரு கேன்சர் கட்டி வருகிறது,இப்போது நீங்கள் அதன் மேல் கத்தி வைத்தால் அது பரவும் அபாயம் உள்ளதல்லவா !? ஒரு லைப்போமா /சாதாரண கட்டிக்கு நீங்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டால் நீங்கள் முட்டாளாக்கப் படுகிறீர்கள் .இதுதான் நிதர்சனம்.இன்று பலப் பேர் தன் கடைசி காலங்களில்,தன் சொந்த மண்ணிலோ,வீட்டிலோ உயிரை விட்டாலே போதும்,தயவுசெய்து மருத்துவமனை வாசம் வேண்டாம் என கதறும் அளவில்தான் நாம் இருக்கிறோம்.இது மாறவேண்டுமென்றால் நாம் மாறவேண்டும்.நம் அறிவியல் மாற்றங்களையும் ,மருத்துவ வளர்ச்சிகளையும் வரவேற்கவேண்டும்.நம்ப வேண்டும்.'நம்பிக்கை ...அதானே எல்லாம் !'
Sources of homeo medicines-spmadhu.blogspot.com |
உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும்.இந்த ஹோமியோபதி மருந்துகள் எங்கிருந்து வருகின்றன ?இதன் மூலம் என்ன?இவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன? ஹோமியோபதி மருந்துகள் பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுகின்றன.நாம் நினைப்பதை போன்று செடி,கொடிகளிலிருந்து மட்டும் அல்ல.விலங்குகள்,கனிமங்கள்,இரசாயனங்கள் ,ஆரோக்கியமான திசுக்களிலிருந்து ,ஆரோக்கியமில்லா திசுக்களிலிருந்து ,ஏன் ?எக்ஸ் -கதிர்கள்,uv-கதிர்களில் இருந்துக்கூட மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன .ஆனால்,ஒன்று உறுதி !உள்ள மருந்துகளிலேயே மிகவும் இனிப்பானவை இவைதாம்.இவற்றை நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மூன்று வயது மகளுக்கோ மகனுக்கோ கொடுக்கலாம்.அவர்கள் அதை துப்ப மாட்டார்கள்.மாத்திரை சாப்பிட அழவோ அடம்பிடிக்கவோ மாட்டார்கள்.மாறாக,குழந்தைகள் ஹோமியோபதி மருந்துகளை விரும்பி சாப்பிடுவார்கள்.இவற்றை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் .தண்ணீர் குடித்து முழுங்க வேண்டிய அவசியமில்லை.நன்றாக மென்று சுவைத்து சாப்பிட வேண்டும்.என்றாலே,நம் நாக்கில் உள்ள நரம்புகளின் வழியாக மருந்து வேகமாக சென்று எல்லா பகுதிகளையும் அடையும்.ஒரு மிட்டாயை எப்படி சுவைத்து சாப்பிடுவோமோ அதேபோல் இதனை உட்கொள்ளலாம் .
Paediatrics-spmadhu.blogspot.com |
'இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?'தாராளமாக கொடுக்கலாம்.ஹோமியோபதி குழந்தைகளுக்கும் (PEDIATRICS),முதியவர்களுக்கும் (GERIATRICS) சிறந்தது.இன்னொமொரு பெரிய நல்ல விஷயம் என்னவென்றால்,இதில் அதிகம் கட்டுப்பாடுகள் இல்லை.பாரம்பரிய சில வைத்தியமுறைகளில் உங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்.ஹோமியோபதியில் அம்மாதிரி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.காபியை தவிர்க்க சொல்வார்கள்.ஹோமியோபதி மருந்துகளுக்கு காபி,கற்பூர மணம் ,பாச்ச உருண்டையின் மணம் ஆகாது.அதன் தன்மையை முறித்துவிடும்.
'ஹோமியோபதி மெதுவாகத்தான் வேலை செய்யும் என்கிறார்களே?' நிச்சயமாக இல்லை.இது ஒரு கட்டுக்கதை.குருட்டாம்போக்கில் சிலர் அடித்துவிடுவது.குணமாதலின் நேரம் இரண்டு விஷயத்தை சார்ந்து இருக்கும்.1.மருந்து எடுத்தவுடன் நோயாளி உடலின் எதிர்வினை (Reaction of the patient).2.சரியான மருந்தை தேர்ந்தெடுத்தல் (Right remedy selection).சரியான மருந்தை தேர்ந்தெடுப்பது என்பது நோயாளி மருத்துவரின் கேள்விக்கு தரும் ஒத்துழைப்பு ,சரியாக மருந்தை எடுத்தல் ஆகியவற்றை பொறுத்து இருக்கும்.என்னுடைய ஒரு அனுபவத்தையே உங்களுக்கு உதாரணமாக தருகிறேன்.
எனக்கொரு நடுத்தர வயதை சார்ந்த பெண்மணி ,காலில் கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே பயங்கர அரிப்பு என்ற பிரச்னையுடன் வந்தார்.இந்த அரிப்பு எரிச்சலால் அவரால் தூங்க முடியவில்லை.நான் கேட்டேன்...'வெறும் காலோடு எப்பொழுதேனும் நடந்தீர்களா?'அவர் இல்லையென்றார்.'சரி ...சமீபத்தில்,செருப்பு ஏதேனும் மாற்றினீர்களா?'.இப்போது சொன்னார்..,'ஆம் டாக்டர் !வாக்கிங் போவதற்காக கேன்வாஸ் ஷூ அணிகிறேன்.அதில் ஏதும் பிரச்னையா டாக்டர்?'
Itching in leg-case-spmadhu.blogspot.com |
பொதுவாக ,திடீரென்று ஷூ அணிபவர்களுக்கு அது முற்றிலும் மூடி இருப்பதால் சிறு சிறு புண் போல அரிப்பு போல வரும்.'ஸைலீஷியா '(Silicea) என்றொரு மருந்து உள்ளது.இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்றது .நான் ஸைலீஷியா 30 ஒரு டோஸ் கொடுத்தேன்.(30 என்பது மருந்தின் வீரியத்தை அதாவது potency யை குறிக்கிறது).அரை மணி நேரத்தில் அவருக்கு அரிப்பு குறைந்தது.அவர் தூங்க ஆரம்பித்துவிட்டார் .அடுத்த நாள் என்னை அழைத்து ,'நான் இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன் 'என்றார்.அதற்கு பிறகு அவர் அந்த பிரச்சனைக்காக திரும்ப வரவில்லை.
ஆதலால்,மெதுவாக சரியாகும் என்பது பொய் .உங்கள் பிரச்னை சமீபத்தில் வந்ததானால் வெகு சீக்கிரமே சரியாகும் .நாள்க்கொண்ட பிரச்சனை நாள் எடுத்து சரியாவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.நாள்ப்பட்ட ஆஸ்துமா (குழந்தையிலிருந்து) இரண்டு வாரத்தில் பூரண குணமான அனுபவமும் எனக்கு உண்டு.இது முழுக்க முழுக்க நோயாளியின் எதிர்வினை திறன்,வயது,சரியான மருந்து தேர்ந்தெடுத்தல் ஆகியவை சார்ந்தது.
இவையெல்லாம் தான்,நான் உங்களிடம் முதற்கட்டமாக பகிர விரும்பிய சில தகவல்கள்.ஹோமியோபதியை பற்றிய ஓர் அறிமுகம்.எதற்காக ஹோமியோபதி எடுக்கவேண்டும் ? அதன் பலம் என்ன? என்பவை பற்றிய ஒரு சிறு துவக்கம்.மேலும் படியுங்கள்.ஹோமியோ பற்றி நிறைய தெரிந்துக்கொள்ளுங்கள்.புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள் .உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் !நிறைய பகிர்வோம் !நன்றி .
அலுவலக ,வீட்டு வேலைகளுக்கு இடையில் பலருக்கு பொறுமையாக வாசிக்க நேரம் கிடைப்பதில்லை ..அவர்களுக்கு என பிரத்தேயகமாக ஆடியோ வடிவில் இந்த பதிவு !! கேளுங்கள் !மகிழுங்கள் !இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டே உங்கள் வேலையையும் செய்யலாம் ! :)
Comments
Post a Comment
Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!