Tuesday 16 September 2014

TeA bReAK !!!

## 2

புன்னகை

வலிகள் நிறைந்த கண்களுக்கு
புன்னகை தோழன்!!












அம்மா 


அறியாத துறை என்று ஒன்றுமில்லை!
எனினும்...,
தோற்றுக் கொண்டே  ஜெயிக்கும் போராளி!!











'உலகிலயே மிக சிறந்த மனிதன்' யாராய் இருக்கும்??
         
அப்படி குறிப்பிடும்படி  யாருமில்லை!
உலகில் இதுவரை தோன்றிய ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு வித்தியாசம் உண்டு.நாய் இனத்தில், எல்லாம் ஒரே குணமல்ல!கொசுக்களில் கூட உண்டு வித்தியாசம்!மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரே மாதிரி இல்லை.இதைத்தான் அறிவியலும்  'Genetic difference','DNA'  என்கிறது.
            அப்படியென்றால் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு தனித் தன்மையுண்டு- Uniqueness!! பல உயிர்கள்;பல தோற்றங்கள்;பல எண்ணங்கள்;பல செயல்கள்;பல விளைவுகள்;பல முடிவுகள்!.ஆக,ஒருவருடைய கருத்தோ,கண்டுப்பிடிப்போ,புரிதலோ, இன்னொருவருக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டிய அவசியமில்லை!எந்த 'Geometrical measure' கொண்டும் இந்த சிறப்புகளை அளக்க வேண்டிய அவசியமுமில்லை!
             உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரு கர்மா உண்டு!ஒரு கணக்கு உண்டு!ஒரு சிறப்பம்சமும் உண்டு!எல்லாம் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கையில்,'இதுதான் சிறந்தது ' என்று எதை எடுத்து கூற??




மற்றவர்களின் அனுபவத்தை கேட்டுக்கொள்ளலாம்;ஆராயலாம்;ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், மற்றவர்களுடைய எண்ணமோ,பாதையோ, ஒருபோதும் பொதுப் பாதையாகாது!நம் வழியை நாம்தான் தேர்ந்து எடுக்கவேண்டும்.இது திமிரு இல்லை ;தெளிவு!(இங்கு,'ஆன்மிகத் தலைவன்','காவியத் தலைவன்', என்று சொல்லிக்கொண்டு இருப்போரின் பின்னால் ,தெரிந்தோ தெரியாமலோ கோஷமிட்டுக் கொண்டு திரியும்  அனைத்து நல்உள்ளங்களின் மண்டையின் ஏதோ ஒரு நரம்பில் பொறி தட்டியிருக்க வேண்டும் !!) 

4 comments:

  1. நிர்மானிக்கப் பட்ட இடங்களுக்கு வழிகாட்டிகள் இருக்கலாம். புதுப் பாதை அமைப்பவர்களுக்கு அறிவொன்றே தெய்வம்!

    கற்றவை, கேட்டவை, பார்த்தவை தவிர 'உணர்ந்தவை' தெளிவைத் தர வல்லதே.

    ReplyDelete
  2. மிகவும் சரியாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்! 'என் வழி தனி வழி !' என்பதே உத்தமம்..!

    ReplyDelete
  3. அடேங்கப்பா... அருமையான பதிவு !!

    ReplyDelete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!