Sunday 7 September 2014

வாயை மூடிப் பேசவும்!!



பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
மக்களே!தயவுசெய்து அவரவர்களது மூக்கை அடுத்தவர்களது விஷயத்திற்குள் நுழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்!அது உங்களிடமே இருக்கட்டும்.அதுதான் அழகு!கொஞ்ச நாட்களாக இந்த 'மூக்கர்'களின் மூர்க்கமான தாக்குதல்களை என்னால் நன்கு உணர முடிகிறது.

ஒரு குழந்தை சேட்டை செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் இருக்குமாயின்,அது 'நல்ல குழந்தை' என பெயர் வாங்கி விடுகிறது.அதுவே வளர வளர தாமாகவே வந்து,"நல்லா இருக்கீங்களா!வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?!"எனப் பார்க்கும் போதெல்லாம் விசாரணையைப் போட்டால்,'அக்மார்க் புள்ளடா நீ!' என்று அங்கீகாரம் பெற்று விடுகிறது!இது மனித இயல்புதான். 'If you compliment me,I feel you are good.' இதுவே சில வேளைகளில்,ஒரு ஊழல்உருக் கூட எடுப்பதுண்டு.'If you compliment me,I compliment you!'.

எனவே,
இது போன்ற ISI முத்திரையோடு வலம் வந்துக்கொண்டிருந்த தற்காலிக நல்லவர்களில் ,நானும் ஒருத்திதான்.எனினும்,சிரிக்கும் பெண் சீறும் பாம்பாக மாற ஒரு சில வினாடித் துளிகளே போதும் போல!இரண்டு நிமிட மேகியை விட விரைவில் ரெடியாகிறது இந்த பொங்கல்!!
நள்ளிரவு 3.00 மணி.சுற்றிலும் எங்கும் சப்தம்,கூச்சல்!நாலு கால பூஜையும் செவ்வனே நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் சிவராத்திரி!'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாபிடுவது மாதிரி எனத் தானாக வலையில் சிக்கிவிட்டோமே 'எனப் புலம்பிக்கொண்டே கண்களை பேனா மூடியின் உதவியால் திறந்து வைத்திருக்கும் பாவப்பட்ட என்னிடம்,ஒருவர் கேட்டாரே ஒரு கேள்வி..!அடடே!

என் அப்பாவின் நெருங்கிய நண்பர்.அவரும் கண் விழிக்கும் challengeல் தான் உள்ளார்!டைம் பாஸ் ஆகவில்லையோ என்னவோ,மனுஷன் கேட்கிறார்...,"ஏம்மா!ஹோமியோபதி 'true'ஆ? 'humbug'ஆ ?"சட்டென்று கண்களை விரித்த எனக்கு,"ஏன்யா!இந்த அகால வேலையில இந்த சந்தேகம் அவசியமா? மானிட பதரே!"என்று கோபம் பீறிக்கொண்டு வந்தது.
நோய்களை ஆணிவேருடன் களையும் ஹோமியோவின் பிரம்மாண்டத்தை இவருக்கு சொன்னால் புரியவாப் போகிறது??இவர்களை போன்றவர்கள் எத்துனை விளக்கம் கூறினாலும் திருப்தி அடையப்போவதே இல்லை.தெரியாமல் கேட்கிறவர்களுக்கும்,சீண்டிப் பார்ப்பவர்களுக்கும் கூடவா,ஏழுக்கழுத வயசாயிருக்கும் எங்களுக்கு, வித்தியாசம் தெரியாது?!!

ஏனய்யா??ஒருத்தி அமைதியாக இருந்தால்,அவளுக்கு பேசத் தெரியாது என்று அர்த்தமில்லை.பேசினால் நீங்கள் காயப்படலாம் அல்லது அசிங்கப்படலாம்!தேவையானவற்றை தேவையான இடத்தில் பேசத் தெரியும் என்று அர்த்தம்.தன்னடக்கம் என்று அர்த்தம்.இதையெல்லாம் விட உங்கள் மேலும் ,உங்கள் வயதின் மேலும் பெரிய மரியாதை உள்ளது என்று அர்த்தம்!
சரபுர சரபுரவென பேசுபவர்கள்எல்லாம் 'பிழைக்கதெரிந்தவர்கள்'.மற்றவர்கள் எல்லாம் 'பாவமா?' என்ன கொடுமை சார் இது?ஒரு உறவினர் வீட்டுக்கோ,விழாவுக்கோ,நண்பர்கள் வீட்டுக்கோ,ஏன்?பொது இடங்களுக்கோ கூட போக முடியாது.எங்கே போனாலும் மருத்துவர் ஜோக்ஸ் ,நக்கல்!வஞ்சபுகழ்ச்சி!மருத்துவம் படிக்கும்போதே இவற்றிலிருந்து எல்லாம் நாங்கள் விலகிக்கொள்ளவேண்டுமா?

இதுக்கெல்லாம் கூட பக்குவமா,'சரி!பாவம்!அறியாமையில் ஏதோ பேசுறாங்க!'என்று விட்டுக்கொடுத்து விட்டு எங்களால் போகமுடியும்.ஆனால்,இந்த அற்ப ஆசாமிகளிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...!!

1 comment:

  1. பேசத் தேவையற்ற பொழுதுகளில் கையாளவே மெளனம் எனும் மொழி. கூடுதலாக ஒரு இதழ் பிரியாப் புன்னகை போதும் இவர்களைச் சமாளிக்க. இந்த மெளனப் புன்னகையின் அர்த்தம் நமக்குள் பொதிந்திருந்தால் போதும். அதை அறியமுடியா அவ்வெளியவர்களைப் பார்த்து இரக்கப்படப் பழகுவோம்.

    ReplyDelete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!