Wednesday, 23 April 2014

அடி என் அழகி.....!!

             முதல் முறையாக தமிழில் ஒரு முயற்சி..!நன்றாக வரும் என்கிற நம்பிக்கையோடு....(இல்லை என்றாலும் வேறு வழியில்லை...உறுதியாக இதுதான்!)சரி ...இப்போது அதிகம் வியப்பது யாரைத் தெரியுமா?சொல்கிறேன்!

              நாம் அதிகம் முன்னேறி இருக்கிறோம்.முன்னேறி கொண்டும் இருக்கிறோம்!முன்பை போல ,வேகாத வெயிலிலும் மழையிலும் நடந்தோ,வண்டி இழுத்தோ,எங்கும் செல்ல வேண்டியதில்லை. நேரம் விரைய கடுதாசி எழுதி ,அது போய் சேரும் வரை காத்திருக்க வேண்டியதுமில்லை.நினைத்தவுடன் நினைத்தவரிடம் நினைத்ததை 
பகிர்ந்துகொள்ள இன்று பல்வேறு சாதனங்கள் உள்ளன.தூரத்து உறவுகளை சந்திக்க வருஷம் முழுக்க திட்டமிட்டு,பணம் ,சந்தோசம்,எல்லாம் சேர்த்து போகவேண்டிய அவசியமில்லை.நாலு தட்டு தட்டினால் உடனே கணிணியில் காட்சியளிப்பார்! இந்த ஊறுகாய்,வடுமாங்கா,வடவம்,வத்தல்,சொத்தல் இதெல்லாம் தேவையே இல்லை.அதான்,காய்கறிகளையே வெட்டி ,பதப்படுத்தி 'சமைத்தால் போறும்!' என்பது போல் விற்கிறார்களே!அது போக,இருக்கிற வேலையில் 'என்ன சாபிட்டா என்ன?'என்கிற அருமையான திருப்ப்திகரமான மனசு நமக்கு கிடைத்துள்ளதே!ஏதாவது ட்ரீட்,பார்ட்டி என்றால் தான் ஆசைபடுவோம்.ஆமாம்!

                வத வதனு அந்த காலத்தில புள்ளைங்க!அங்கயும் இங்கயும் ஓடி வால்தனம் பண்ணுங்க!இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலைன்றேன்! ஆதலால் அந்த தொல்லையும் கிடையாது.கல்யாணம் செய்து வைத்தால் பண்ணிக்குவோம்.இல்லேன்னா 'லிவிங் டுகெதர்'...ஓவர்!

                 இதுல எதை பார்த்துதான் வியப்பு?என்றால்....
இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் வர தொடங்கி இருக்கிறார்கள்.நுழையாத துறையே இல்லை !என்று கூட சொல்லலாம்.ராக்கெட் விடுவதில் தொடங்கி ஆட்டோ ஓட்டுவது வரை பெண்களை பார்க்க முடிகிறது.இவர்கள் தான் ஒரு காலத்தில் தூணிற்கு பின்னால் நின்றுகொண்டு இருந்தவர்கள்!ஆனால் இந்த வளர்ச்சி மிகவும் குறைந்த விகிதமே! இது முழு சுதந்திரத்துடன் நடக்கிறதா?என்று கேட்டால்,முன்னால் வரிசையில் நின்று கொண்டு இருப்பவர்களுக்குகூட  அது குறித்து  சொல்ல தெரியாது ,அல்லது சொல்ல பயப்படுவார்கள்,அல்லது முழு மனதுடன் ஒப்புகொள்ள மாட்டார்கள்.ஏனென்றால் அதுதான் இன்றைய நிலை.

                 
இது ஒரு புறம் இருக்க,இன்று படிக்க, வேலை பார்க்க,என வரும் பெண்கள் தாங்கள் பெரிதாக ஜெயித்து விட்டோம் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அதுதான் இல்லை! ஒன்று நினைவில் கொள்ளவேண்டும்!ஆண்களை போல் உடை அணிந்து கொள்வதாலோ,மது அருந்துவதாலோ,'மாமா,மச்சி' என்று பேசிக்கொள்வதாலோ ஆணாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ ஆக ஒருபோதும் முடியாது!இது வெறும் பொய்யான நிரந்தரமில்லாத மன திருப்தியே!

                    உண்மையான பெண் ,நினைத்த காரியத்தை சரியாக செய்து முடிக்கும்போதும் ,தான் சொல்ல நினைப்பதை ,தன் நிலைமையை பிறர்க்கு புரியவைக்கும்போதும் ,தன் குடும்ப நிலை அறிந்து அதற்கேற்ப நடந்துக்கொள்ளும்போதும்,தனக்கான கடமைகளை செய்துவிட்டு பிறரிடமிருந்து தனக்கானதை 'தகுதி உள்ளவளாக' பெற்றுக்கொள்ளும்போதும்,'நான் மிகவும் வித்தியாசமானவள்' என தன் நடையிலும்,பேச்சிலும்,கலாசாரத்திலும், உணர்த்தி உன்னதமாகும்போதும்,அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து காண்பிக்கும்போதும், தெரிகிறாள்! மேலும் அழகாக! பெண்மையுடன்!
Reactions:
Posted on by SP Madhumitha | No comments

0 comments:

Post a Comment

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!