The Rant

தரையில் அமர்ந்திருக்கும்பொழுது வாலேறும்பு அருகில் வருவதுண்டு.மரங்கள் சூழ்ந்த எங்கள் வீட்டில் எறும்பிற்கு பஞ்சமிருக்காது. வழக்கமாக வேகமாக அங்கும் இங்கும் செல்லும் எறும்பை லேசாக தலையில் தட்டி விடுவேன்.அது மயங்கி சுருண்டு எழுந்து நிதானத்தை வரவழைத்து கொண்டு வேறு திசையில் போய்விடும்.இப்படியே அது என் மீது ஏறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்துவிடுவேன். 

ஒரு முறை அப்படி தலையில் தட்ட முற்பட்டபோது சற்று வேகமாக அடித்தது போன்று இருந்தது.ஒரு நிமிடம் "அடடா என்ன ஆயிற்றோ" என்ற பதட்டம் வந்துவிட்டது.ஏனென்றால் அது எந்த தவறும் செய்யவில்லை.அது போக்கில் அது போயிற்று.நான்தான் மேலே ஏறிவிடுமோ என்ற பயத்தில் அடித்துஇருக்கிறேன்.(கடித்தால் சிறிது நேரத்திற்கு நல்ல வலி இருக்கும்) அப்படி இருக்கையில் அதனை உற்று பார்த்தபடியே ஒரு நிமிடம் இருந்தேன். அடித்த அடியில் அது சுருண்டு, எழ முயற்சித்து, எழுந்து தடுமாறியது. "அய்யயோ நன்றாக அடித்து விட்டோம் போல" அதே பதட்டம் தான். "இன்று இதன் கதை முடிய நான் ஒரு காரணம் ஆகிவிட்டேனோ !" போன்ற எண்ணங்கள். 

கண்ணிமைக்கும் நேரத்தில் அது தப்பித்து ஓடியது. "அப்படா! She survived!" ஒரு நிம்மதி பெருமூச்சு. 

மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை survive செய்திருக்கும் ஒரு இனம் பாக்டீரியா. ஒரு நுண்ணுயிர் தானே, ஒரு antibiotic எடுத்தால் சாகும் சிறு உயிர்தானே என்று நினைத்தாலும் பல வகையான speciesஸ்களை கடந்து இன்றும் survive செயகிறது. இந்த எறும்பு என்றில்லை, மனிதன் எல்லா species இடமும் காண்பிப்பது அவன் ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு மேல் உயர்ந்து நிற்பதைத்தான். பாக்டீரியா, எறும்பு போன்றவை சிறியதாய் இருந்தாலும் அவை சிலவற்றை கற்றுக்கொடுப்பது போல் உள்ளது.

அதன் வழியில் அது சென்று கொண்டு இருந்தது. அதன் மேல் ஒன்றும் தவறில்லை.உற்சாகமாக சென்று கொண்டிருந்த பாதையில் திடீரென்று ஒரு அடி , எதிர்பாக்காத நேரத்தில். ஆனால் அது complain செய்யவில்லை ! எழுந்திருக்க போராடுகிறது. இதுதான் அதனிடம் நான் வியக்கும் தன்மை! எந்த complainனும் இல்லை எந்த புலம்பலும் இல்லை.மீண்டும் எழுந்து உற்சாகமாக ஓடுகிறது.நாம்தான் செய்யாத தவறிற்கு வாங்கிக்கட்டி கொள்கையில் புலம்புகிறோம், வருத்தப்படுகிறோம், சபிக்கிறோம், மேலும் பல. 

வண்டியிலிருந்து விழுந்து அடிபட்டுவிட்டால் ஒரு கூட்டமே வந்து பேசி பேசி, புலம்பி புலம்பி, சபித்து சலித்து நாட்களை தள்ளுகிறோம். ஆச்சர்யமாக உள்ளது எறும்பு எப்படி இது எதையுமே செய்யாமல் எழுந்து நின்றது என்று! "சரி இதை எதற்கு பதிவு செயகிறாய்?" எனக்குள்ளே ஒரு கேள்வி. இதன் மூலம் எறும்புற்கு ஜீவகாருண்யம் என்று காண்பித்து கொள்ளவா? இல்லை மறுபடியும் ஒரு புலம்பலா? இல்லை மோட்டிவேஷனா? 
"தோன்றியது.. எழுதினேன்"என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். 

எறும்பிற்கு எண்ண ஓட்டங்கள் இப்படியெல்லாம் இல்லை. ஆனால் எனக்கு இருக்கிறதே! ஏனென்றால் அந்த survival of the fittest மனிதர்களில் நானும் ஒருவள்.

Comments

Popular posts from this blog

The Chrysalis

FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....