Posts

Showing posts from November, 2026

சொரியாசிஸ் - ஒரு பார்வை

Image
சொரியாசிஸ் - ஒரு பார்வை   *சொரியாசிஸ் என்றால் என்ன?*  சொரியாசிஸ் என்பது ஒரு நாட்பட்ட அழற்சி சார்ந்த சரும நோயாகும். Autoimmune disorder என்று சொல்லக்கூடிய தன்னுடல் தாக்குதல் நோய்களில் ஒன்று. அதாவது நம்முடைய செல்களே நமக்கு எதிராக வேலை பார்த்தால் என்ன நடக்கும்? அதுதான் இங்கு நடக்கிறது.  உடலில் குறிப்பாக தலை, முதுகு, கைகள், கால்கள், உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களிலிருந்து செதில் செதிலாக தோல் உரிந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு அரிப்பு, எரிச்சல், காயமாகுதல், இரத்தம் வருதல் போன்றவை உடன் இருக்கலாம் .  *எதனால் வருகிறது* ? இது ஒரு தன்னுடல் தாக்குதல் நோய். காரணியாகவோ, காரணமாகவோ எதனையும் கூற இயலாது. பொதுவாக நமது செல் வளரும் சுழற்சி ஒரு மாதம் என தோராயமாக வைத்துக்கொண்டால், சொரியாசிஸ் செல்கள் இரண்டு, மூன்று நாட்களிலேயே வளர்ந்து முதிர்ச்சி அடைகின்றன.  இதனால் உற்பத்தியான செல்கள் தோலில் சேர்ந்து சேர்ந்து செதில் செதிலாக கொட்டுகின்றன. சொரியாசிஸ் சருமம் பொதுவாக வறண்டு இருக்கும். சிலருக்கு நல்ல அரிப்பும் இருப்பதால் காயமாகி பின் இரத்தம் வரவும் வாய்ப்புண்டு. க...