Posts

Showing posts from October, 2026

The Rant

Image
தரையில் அமர்ந்திருக்கும்பொழுது வாலேறும்பு அருகில் வருவதுண்டு.மரங்கள் சூழ்ந்த எங்கள் வீட்டில் எறும்பிற்கு பஞ்சமிருக்காது. வழக்கமாக வேகமாக அங்கும் இங்கும் செல்லும் எறும்பை லேசாக தலையில் தட்டி விடுவேன்.அது மயங்கி சுருண்டு எழுந்து நிதானத்தை வரவழைத்து கொண்டு வேறு திசையில் போய்விடும்.இப்படியே அது என் மீது ஏறாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்துவிடுவேன்.  ஒரு முறை அப்படி தலையில் தட்ட முற்பட்டபோது சற்று வேகமாக அடித்தது போன்று இருந்தது.ஒரு நிமிடம் "அடடா என்ன ஆயிற்றோ" என்ற பதட்டம் வந்துவிட்டது.ஏனென்றால் அது எந்த தவறும் செய்யவில்லை.அது போக்கில் அது போயிற்று.நான்தான் மேலே ஏறிவிடுமோ என்ற பயத்தில் அடித்துஇருக்கிறேன்.(கடித்தால் சிறிது நேரத்திற்கு நல்ல வலி இருக்கும்) அப்படி இருக்கையில் அதனை உற்று பார்த்தபடியே ஒரு நிமிடம் இருந்தேன். அடித்த அடியில் அது சுருண்டு, எழ முயற்சித்து, எழுந்து தடுமாறியது. "அய்யயோ நன்றாக அடித்து விட்டோம் போல" அதே பதட்டம் தான். "இன்று இதன் கதை முடிய நான் ஒரு காரணம் ஆகிவிட்டேனோ !" போன்ற எண்ணங்கள்.  கண்ணிமைக்கும் நேரத்தில் அது தப்பித்து ஓடியது. ...