Posts

Showing posts with the label ARTICLES BY MADHU

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

Image
                                காலங்களிலே மிகவும் கொடுமையான காலம் எது தெரியுமா?இந்த படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திரிவது  ! !  "எங்கப்பன் என்ன இன்னா டார்ச்சர் பண்ணுனான் தெரியுமா இந்த வேலைகிடைக்காம தின்ன நேரத்துல "என்று எல்லா அப்பாக்(ன்)களும் தன் மகன் மகளிடம் புலம்புகிறார்கள்.ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்களும் அதையேத் தான் செய்கிறார்கள்.முரணாக தோன்றவில்லை?? அவர்களும் எத்துணை நாட்கள் தான் பாரத்தை தாங்குவார்கள் ..   நியாயம்தான் .அட வேண்டுமென்றா தெண்ட சோறு தின்னுகிறார்கள் பிள்ளைகள்?உங்க காலத்தில் பத்தாங்கிளாஸ் அவர்களுக்கு கிடைத்த வேலைக்கூட இந்த காலத்தில் ஒரு என்ஜினியர் பயலுக்கோ டாக்டர் பொண்ணுக்கோ கிடைப்பதில்லைங்க ..எங்க போவோம் நாங்க ?தேமேன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம் சமசீர் கல்வினானுங்க ,சரி கும்பலா நூத்துக்கு நூறெல்லாம் எடுத்து காட்டுனோம் ,நீட் தேர்வுனானுங்க ,முட்டியடிச்சி உள்ள நுழைஞ்சா பாஸ் ஆகவே ததிகிணத்தோம் ஆடவேண்டியதா இருக்கு ,டிஸ்டிங்க்ஷன்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தா நெஸ்ட...

உன் குத்தமா?என் குத்தமா?யார நானும் குத்தம் சொல்ல?

Image
                      அது ஒரு காலைவேளை வகுப்பு. எப்போதும் போல எல்லாரும் இயந்திரத்தனமாக வருவதும்  பாடம் நடத்துவதும்,போவதுமாக இருக்கும் நேரத்தில் ஒரு நெருடலான சம்பவம் அரங்கேறியது! மாணவர்களை பிடிப்பது,தண்டனை கொடுப்பது,இதெல்லாம் சாதாரணமாக எல்லாக் கல்லூரிகளிலும் நடைபெறும் விஷயங்கள் தான்..என்றாலும் இம்முறை அது வேறொரு பாதைக்கு கொண்டு சென்றது!                      சார் அவன் புத்தகத்தை விரித்து, வெகு நேரமாக  ஒரு  பக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.சற்று நேரம் கழித்து,சில வார்த்தைகளின் 'ஸ்பெல்லிங்' எழுதச் சொன்னார்.வேதனை என்னவென்றால்,அவன் எழுதியதில் அத்தனை பிழைகள்!! சிறிது நேரத்திற்கு அங்கு ஒரு மயான அமைதி!  பிறகு சார் அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.விசாரித்ததில் ,அவன் தமிழ் மீடியத்தில் படித்ததாகவும் அதனால் படிப்பில் சிரமம் உள்ளதாகவும் தெரியவந்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது!                   ...

வாயை மூடிப் பேசவும்!!

Image
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களே!தயவுசெய்து அவரவர்களது மூக்கை அடுத்தவர்களது விஷயத்திற்குள் நுழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்!அது உங்களிடமே இருக்கட்டும்.அதுதான் அழகு!கொஞ்ச நாட்களாக இந்த 'மூக்கர்'களின் மூர்க்கமான தாக்குதல்களை என்னால் நன்கு உணர முடிகிறது. ஒரு குழந்தை சேட்டை செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் இருக்குமாயின்,அது 'நல்ல குழந்தை' என பெயர் வாங்கி விடுகிறது.அதுவே வளர வளர தாமாகவே வந்து,"நல்லா இருக்கீங்களா!வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?!"எனப் பார்க்கும் போதெல்லாம் விசாரணையைப் போட்டால்,'அக்மார்க் புள்ளடா நீ!' என்று அங்கீகாரம் பெற்று விடுகிறது!இது மனித இயல்புதான். 'If you compliment me,I feel you are good.' இதுவே சில வேளைகளில்,ஒரு ஊழல்உருக் கூட எடுப்பதுண்டு.'If you compliment me,I compliment you!'. எனவே,

வாழ்க்கைன்னா இன்னான்னா......!!??

Image
                சமீபத்தில் கிடைத்த ஒரு பத்து  நிமிட சிநேகம்,என்னை இதோ இங்கே வரவழைத்து இருக்கிறது ! அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது வயது இருக்கலாம்.கையில் ஒற்றை பை.அவரும் என்னை போல பேருந்திர்க்காகதான் காத்துக்கொண்டு இருக்கவேண்டும் ."ஒரு நிமிஷம்!இந்த பையை பாத்துக்கோங்க.இதோ வந்துவிடுகிறேன்." என அவசரமாக டிக்கெட் ரிசெர்வ்  செய்ய ஓடிய நான், திரும்பி வரும்போது,அவர் இரு கைகளையும் இருக்கை மீது வைத்து இடம் பிடித்து வைத்திருக்கும் காட்சியை பார்த்தவுடன், சிறிதாக புன்னகைத்துவிட்டு, மெல்லிய குரலில் நன்றி சொல்லி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் எங்கள் உரையாடல் தொடங்கியது.

அடி என் அழகி.....!!

Image
             முதல் முறையாக தமிழில் ஒரு முயற்சி..!நன்றாக வரும் என்கிற நம்பிக்கையோடு....(இல்லை என்றாலும் வேறு வழியில்லை...உறுதியாக இதுதான்!)சரி ...இப்போது அதிகம் வியப்பது யாரைத் தெரியுமா?சொல்கிறேன்!               நாம் அதிகம் முன்னேறி இருக்கிறோம்.முன்னேறி கொண்டும் இருக்கிறோம்!முன்பை போல ,வேகாத வெயிலிலும் மழையிலும் நடந்தோ,வண்டி இழுத்தோ,எங்கும் செல்ல வேண்டியதில்லை. நேரம் விரைய கடுதாசி எழுதி ,அது போய் சேரும் வரை காத்திருக்க வேண்டியதுமில்லை.நினைத்தவுடன் நினைத்தவரிடம் நினைத்ததை