Tuesday 3 September 2019

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

                                காலங்களிலே மிகவும் கொடுமையான காலம் எது தெரியுமா?இந்த படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திரிவது !!  "எங்கப்பன் என்ன இன்னா டார்ச்சர் பண்ணுனான் தெரியுமா இந்த வேலைகிடைக்காம தின்ன நேரத்துல "என்று எல்லா அப்பாக்(ன்)களும் தன் மகன் மகளிடம் புலம்புகிறார்கள்.ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்களும் அதையேத் தான் செய்கிறார்கள்.முரணாக தோன்றவில்லை?? அவர்களும் எத்துணை நாட்கள் தான் பாரத்தை தாங்குவார்கள் ..   நியாயம்தான் .அட வேண்டுமென்றா தெண்ட சோறு தின்னுகிறார்கள் பிள்ளைகள்?உங்க காலத்தில் பத்தாங்கிளாஸ் அவர்களுக்கு கிடைத்த வேலைக்கூட இந்த காலத்தில் ஒரு என்ஜினியர் பயலுக்கோ டாக்டர் பொண்ணுக்கோ கிடைப்பதில்லைங்க ..எங்க போவோம் நாங்க ?தேமேன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம் சமசீர் கல்வினானுங்க ,சரி கும்பலா நூத்துக்கு நூறெல்லாம் எடுத்து காட்டுனோம் ,நீட் தேர்வுனானுங்க ,முட்டியடிச்சி உள்ள நுழைஞ்சா பாஸ் ஆகவே ததிகிணத்தோம் ஆடவேண்டியதா இருக்கு ,டிஸ்டிங்க்ஷன்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தா நெஸ்ட்டுன்றானுங்க ,நடு காட்டுல நின்னுகிட்டு முன்னாடி போனா  முட்டுவானுங்க பின்னாடி வந்தா ஒதைக்குறானுங்க,இந்த வம்பே வேணாம்னு பொறியியயாலானா ஆகலாம்னு பாத்தா எங்களுக்கு முன்ன ஒரு கூட்டமே வேலைஇல்லாம நிக்குது.அப்டே தாவி வங்கி துறைக்கு போனா வங்கிகள இணைச்சு பொருளாதாரத்தை சரிப்பன்னிட்டு இருக்காங்க .மீதமுள்ள ஆடிட்டர்,வக்கீல்,கலெக்டர் ,..வயசாகிடும்ங்க .இதுல எந்த பஸ்ஸ  புடிக்கறது ? எந்த ஊர்ல எறங்கறது ? 
spmadhu.blogspot.com VIP


                          
                              அதே நேரத்தில் பெற்றவர்கள் பக்கம் யோசித்தால் அவர்களும் பாவம் தான்.ஒரு இருபத்தி மூன்று,இருபத்தி ஆறு வயதில் தொடங்கும் இந்த குடும்ப ஓட்டம் ஐம்பது வயதை நெருங்கும்போது சலிப்பைத்தான் தரும் .இது போன்ற நேரத்தில் தான் நம் அயல்நாட்டின்  சில முறைகளே தேவலாம் என தோன்ற வைக்கிறது..!  Adulthood  என சொல்லப்படும் பதின்பருவத்திலேயே தனியே சம்பாரித்து  நிற்கும் திறன் அங்கே கற்பிக்கப்படுகிறது .யாரும் யாருக்காகவும் உழைத்து ஓடாய் தேயவேண்டாம்.அப்பா அம்மா சொத்து சேர்ப்பதில்லை.பிள்ளை அதனை எதிர்பார்ப்பதும் இல்லை.பகுதி நேர வேலை முழு நேர வேலை தர வேலைவாய்ப்பும் அங்கே தரப்படுகிறது.முக்கியமாக அதனை யாரும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை.இங்கே நாம் பகுதி நேரமாக ஓட்டலில் ஒரு மெடிக்கல் மாணவரோ ,என்ஜினியர் மாணவரோ வேலை பார்த்தால் அவ்வளவு தான் ..மரியாதை   போய்விடும் ,நேரமிருக்காது படிப்பதற்கு என பல சிக்கல்கள் .ஹும் ..என்று தீருமோ இந்த வேலை இல்லா பட்டதாரிகளின் நீல் டயலாக்ஸ் மற்றும் குமுறல்கள் !!


                        சரி !அது போகட்டும் .விஷயத்திற்கு வருவோம் .இப்போது புகுத்த விரும்புவதே 'பாராட்டைப்' பற்றித் தான்.அட!ஆமாம்ங்க !!இந்த பாராட்டிற்கு அதிக பவர் உண்டு..எப்படி? என்கிறீர்களா..'கோபம்'  என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி என்று அடிக்கடி என் தாய் கூறுவார்.என்னை பொறுத்தவரையில் நேர்மறையாக சொன்னால் 'அன்பும்','பாராட்டும்' இரு பக்கமும் இனிப்பை தரக்கூடிய குல்ஃபீ  ஐஸ் போன்றது.மேலிருந்து கீழ் சாப்பிட்டாலும் கீழிருந்து மேல் வந்தாலும் சுவையானது.அன்பும் பாராட்டும் அப்படிதான்.கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் சந்தோஷத்தை அளிக்கக்கூடியது.ஒருவரிடம் அன்பாக நடந்துக் கொள்ளும்பொழுது அவர் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நம் ஆத்ம திருப்தியும். ஒருவரை மனமார பாராட்டும்பொழுதும் அவர்க்கு கிடைக்கும் திருப்தியும் நம் உற்சாகமும்.
Parenting-spmadhu.blogspot.com


             
                      உதாரணத்திற்கு ,அலுவலகத்தில் சக நண்பரிடம் ,'இன்று நன்றாக பிரசன்டேஷன் செய்தீர்கள் .அருமை'என்பது போன்ற பாராட்டுகளைத் தரும்பொழுது அவருக்கு ஒரு உற்சாகம் வரும்.செய்த உழைப்பிற்கு மனதிருப்தியை அது தரும்.உங்களுக்கும் ஒருவிதமான  நேர்மறை அலைகள் ,எண்ண ஓட்டம் வளரும்.ஒரு முதிர்ச்சி ,பக்குவம் அதில் வெளிப்படுவது.அன்று மதியம் லன்ச் உங்களுடன் சாப்பிட அவர் விரும்புவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ஒரு குழந்தை தொண்ணூறு மதிப்பெண்களுடன் வந்து நிற்கும்பொழுது ,'பரவா இல்லையே !நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய் .இன்னமும் உன்னால் வாங்க முடியும்.உழைப்புக்கு என்றுமே பரிசுண்டு ' என்பது போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறோம்.அடுத்த முறை அதை விட கடினமாக  உழைத்து நூறு எடுக்க முற்படும்.
Love-spmadhu.blogspot.com



                    எத்தனை கணவர்கள் தன் மனைவியிடம் ,'இன்று சாம்பார் ரொம்ப நல்லா  இருக்கு.நேற்று வைத்த பிட்ல நீங்க  செய்ததிலேயே பெஸ்ட்'என்று எத்தனை பேர் சொல்கிறார்கள் ?ஒரு ஓட்டப்பந்தய முடிவில் எத்தனை இரண்டாம் இடக்   குழந்தை முதல் இடம் வாங்கியவரிடம் போய் ,'நல்லாவே விளையாடினாய்.வாழ்த்துக்கள் !'என்று சொல்ல கற்றுக்கொடுக்கிறோம் ?நிஜத்தில் ,அப்படி சொல்ல வேண்டும்.அது ஒரு பக்குவப்பட்ட மனதின் ,வளர்ப்பின் வெளிப்பாடு..!
Joint family-spmadhu.blogspot.com



                    ஒரு உறவினர்  வீட்டிற்கு போகிறோம்.அமோகமாக வரவேற்று உணவு பரிமாறி சிரித்து மகிழ்ந்து விட்டு கிளம்புகிறோம்..ஒரு வார்த்தை ,'எல்லாமே சூப்பரா இருந்துச்சு.வயிறு நிறைய சாப்பிட்டோம் 'என்று சொல்லி பார்ப்போமே ..அவர்கள் முகம் சிவந்துவிடும்.வாசலில் வெல்கம் கோலத்திலிருந்து  கைத் துடைக்க கொடுத்த டிஷ்யூ பேப்பர் வரை எல்லாவற்றையும் நாம் கவனித்தோம் ..அதை சொல்லி வெளிப்படுத்துகிறோம் .அதுதான்.


                     பாராட்டும் பண்பு  என் அப்பாவுடைய குணம்.அதனுடைய தாக்கம் எனக்கு உண்டு.நான் செய்திருக்கிறேன் .பல மன முதிர்ச்சியுடைய பெருந்தன்மையான மனிதர்கள் பாராட்டுவதையும் நான் கண்டிருக்கிறேன் .அதனுடைய பலன் அலாதியானது .அதையே பகிர்ந்தேன்.பாராட்டுவோம் !நேர்மறை எண்ணங்களுடன் முன் செல்வோம் !உடன் உள்ளவர்களுக்கும் கை  கொடுத்து   நடப்போம் !
      

5 comments:

  1. Super very good thoughts very humorous way of presentation keep it up

    ReplyDelete
  2. Thank you!Thanks for appreciation ,your nature as well!! :)

    ReplyDelete
  3. மிகத் தேர்ச்சியான எழுத்து வடிவம். கருத்துக்களை பகிர்வதில் நேர்த்தியும் நளினமும் கைவந்திருக்கிறது. வாழ்த்துக்கள் SP Madhu

    முற்பாதியில் இன்றைய இளைய தலைமுறையினரின் தீராத் தலைவலியும் பிற்பாதியில் மாண்புறு மனிதர்கள் இயல்பான அடுத்தவரைப் பாராட்டும் குணத்தின் அவசியம் பற்றியும் அலசிச் செல்லும் பதிவின் போக்கை மிகவும் ரசித்தேன். தொடர்க.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நிலாமகள் !! நல்ல விஷயங்களை எல்லோருடனும் பகிரும்போழுது ஒரு மகிழ்ச்சி .வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி :)

    ReplyDelete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!