Thursday, 27 August 2015

பாசம்! - விலை என்ன????

                               
காரல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதத்தில் இருந்து சில வரிகள்...

“கெசட் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டேன். இப்படி ஒரு பதவியில் அமர்ந்து நிர்வாகம் செய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம். இப்படி ஒரு பிடிக்காத விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் நீ தான். என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுகிறதென்றுஎனக்குத் தெரியும். வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர்மானம் என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டுமென்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஜட் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். என் பொருட்டு பாலா இன்னல்களை அனுபவிக்கிறாய் எனக் கேள்விப்பட்டேன். வருத்தப்படவில்லை. மகிழ்ச்சி அடைந்தேன். இதுதான் உண்மை வாழ்க்கை. பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்று அஞ்சாதே. உன் மனதை உறுதிப் படுத்திக் கொள்.” – உன் நினைவில் இருக்கும் காரல் மார்க்ஸ்.

//1913ம்  ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் வசித்து வந்த பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட தலைவராய் எதிர்த்து நடத்திய அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார். 1913ம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப் பட்ட அவர், உடல்நலக் குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி இரத்தான பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார். தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என காந்தி பாராட்டியுள்ளார்.//A South African Tamil lady named Thillaiyadi Valliammai. She worked with Gandhi in his early years when he toned his nonviolent methods in South Africa, fighting the apartheid there.////Valliammai, 16 years of age was arrested by the South African police while she was in the protest march and spent three months in Jail. She suffered a fatal fever in jail, when she was released, she was very weak and could barely walk. She heard some South African prison officers yelling at her, `why don`t you people register and become South Africans instead of Indians. Your India doesn`t even have a flag and it is not even a country. What are you really fighting for.` If having a flag is what would give form to India, then here it is, she said, tearing off her saffron-white-green sari and she waved it triumphantly, MY FLAG! MY MOTHERLAND! Mahathma Gandhi met her and asked: Do you not regret having been to jail? Look at you! If going back to jail again would add to the cause, I would do it again she replied. //

   இது போன்று பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.உதாரணங்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை! இப்போது அதுவல்ல பேச்சு  ...! விஷயம் என்னவென்றால் இப்படி ஒவ்வொருவரும் ,காதல்,நாட்டுப்பற்று,மொழிப்பற்று என எதோ ஒன்றை நோக்கியே ஓடியிருக்கிறார்கள் .இவர்கள் வாழ்ந்த அதே மண்ணில் பிறந்த நாமும் எதோ ஒன்றை நோக்கி ,எதன்  பின்னாலோ ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்! ஆனால், இந்த ஓட்டத்தில் ஒரு வித்தியாசம் என்னவென்றால்  இவர்களுக்கு நல்ல வாய்ப்பும், தனியொரு பாதையும் இருந்தது. நமக்கோ??? போடுங்கள் கேள்விக்குறியை!!  '???'                                  

        அது எப்படி?அந்த காலத்தை விட அதிக வாய்ப்பும் வசதியும் நிறைந்த 'இந்த' காலத்தில் எப்படி சாத்தியமாகும்? அப்போது...இதுதான் முதல் கேள்வியாக இருக்க வேண்டும்! எப்படி?? அந்தக்  காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நம்மைப் போன்றுதொலைக்காட்சியோ,பேஸ்புக்கோ, டேபோ கிடையாது.ஒய்வு நேரத்தை அவர்கள் இதில் எல்லாம் செலவழிக்கவில்லை.அவர்கள் மனமும் உணர்வும் நல்லதை மட்டுமே சிந்தித்தன. அடுத்தவர்களுக்காக சிந்திக்கும் மனமும், அடுத்தவர்களை தாமாக நினைத்து கொடுத்து உதவும் தன்மையும் இருந்தது.  அப்போ அவர்களுக்கு பொழுது போக்கே இருந்ததில்லையா? இப்போதான்  பேஸ்புக், டிவிட்டர்  வந்து நம்மைக்  கெடுத்து விட்டதா? என்றால்..

சுத்தப் பொய்! அந்த காலத்திலும் நமக்கு சரி சமமான பொழுது போக்கும், சீரழிவுகளும் இருந்தன. நாடகம், தெருக் கூத்து, பாட்டுக் கச்சேரி, வாதப் போர், நாட்டியம் எனப் பலவும் இருந்தன. ஒரே ராஜாவுக்கு பதினாறு பெண்டாட்டி கட்டி அழகுப் பார்த்தவர்கள் தான் நாம்! அப்போ இது காலத்தினால் உண்டான மாற்றம் இல்லை என்பதை இப்போது தெளிவு படுத்திகொள்வோம். ஆதலால் 'அந்த காலத்துல...' என பெருசுகளும், 'மா..மோர் ஆப் டிஸ்ட்ராக் ஷன்ஸ்  மா...' என சிறுவண்டுகளும் அலுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை!                                                         

      'தந்தையர் தினம்' என்றும் அன்னையர் தினமென்றும்    உறவுகளுக்காக பல தினங்கள்  கொண்டாடுறோம்.
'ஆம்பளையா யார் வேணாலும் இருக்கலாம்,ஆனா ஒரு நல்ல அப்பாவா  நீ மட்டும்தான் பா இருக்கமுடியும்.' னு  பொண்ணு ஸ்டேட்டஸ்  போடுறா  .அதுக்கு அப்பாவையும் சேத்து  நூத்தி எட்டு லைக்ஸு!  என்ன சார் கொடுமை இது? 'தந்தையர் தின வாழ்த்துக்கள்'அப்புடீன்னு  அப்பாகிட்ட சொன்னா  போதாதா? அதுக்கு எதுக்கு இத்தன பப்ளிசிட்டி ? அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா ஆயிட்டோமா  நாம? இப்போ, உணர்சிகள் எல்லாம் லைக்லயும் ,ஷேர்லயும்  கரைஞ்சு போயிடுது!!                                               என்னுடைய விடுதியில் நாங்க எல்லாரும் சாப்பிட நிற்கும் வரிசையில்- ,போன் செய்ய நிற்கும் வரிசையில்- என கிட்டத்தட்ட எல்லா வரிசையிலும் அடிச்சிப்போம். ஏனென்றால், விட்டால் கிடைக்காது....! அது மாதிரி பொண்ணுக்கு அடிச்சிகிறான்.அந்த காலத்துலையும் குத்து சண்டை,மல்யுத்தம் எல்லாம் போட்டாங்க.,.ஆனால், இதுல ஒரு கடுப்பு என்னவென்றால்,முதல் கேள்வியே 'fb யில் இருக்கியா? watsapp.. ??' என்றுதான் தொடங்கும்! அது தொடர்பு கொள்வதற்கு  அல்ல ,'சும்மா ஒரு free chating try பண்ணலாமேன்னு தான்’ அப்புடின்னு அப்புறம் சொல்லும்போதுதான்  புரியும்...! அமர காதல் எல்லாம் இப்போது இல்லை. எல்லாம் app காதல்.. அல்பக் காதல்.! 
(இந்த 'அதையும் தாண்டிப் புனிதமான காதல’ கண்டுபிடிக்க ஒரு அருமையான பாயிண்ட் இருக்குது. அது என்னவென்றால்,1.friend  request ,2.கஷ்டப்பட்டு சிரிச்சு ,முடியெல்லாம் விரிச்சு போட்டு ஒரு போஸ் ...இது Profile pic .3.தொடர்ந்து போட்டோ  போஸ்ட்டிங் .அண்ட் finally 'Am single ' னு ஒரு அழுகாச்சி smiley .இவ்ளோதான்! ;) )                       
  
     சமீபத்தில் எனக்கொரு படிப்பினை கிடைத்தது! அதாகப்பட்டது.... அடுத்தவர்கள் மேல் எந்த குறையும் போடாமல் தன் வழியை ஒழுங்காக பார்ப்பது ..!அப்போது தான் எனக்கென்று ஒரு 'வழி' தனியாக வேண்டும் என்று தோன்றியது. ஆமாம். எல்லோருக்கும் வாய்ப்பும்,வசதியும் கொட்டிகிடக்கிறது.அதை பயன்படுத்தி நம்முடைய வழியை நாம் தேர்ந்து எடுப்போம்.எல்லாரையும் போல லைக்கும்  ,ஷேர்-ம்  போட்டுகொண்டு வீட்டில் கிடைக்கும் அன்பை தவறவிட்டு விடாதீர்கள்.'எனக்கு எங்க அம்மா,அப்பா  ரொம்ப முக்கியம் .இப்படி யார் யார்க்கு எல்லாம் முக்கியம். போடுங்க லைக்' என்று அன்பை பிரகடனபடுத்தாமல் அமைதியாக உங்கள் வேலையை பாருங்கள் .  அப்பா அம்மாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.       
  

           
இது வெறும் பேஸ்புக்  கலாசாரம்  மட்டும் இல்லை .சாதாரணமாகவே,ஒரு தனி மனிதனுடைய மதிப்பு ரூபா நோட்டை போல குறைந்து விட்டது.இப்படி பேசினா இமோஷனல் ஏகாம்பரம் இல்லை! மனுஷன் என்று இருந்தா இதெல்லாம் கொஞ்சம் வேண்டும். இல்லையென்றால் ,'உப்பில்லாத சாப்பாடு குப்பையிலே'.
                                                                                                   


Reactions:
Posted on by SP Madhumitha | 2 comments

2 comments:

  1. தெளிந்த சிந்தனை இருப்பது கண் தெரிந்து வழி நடப்பது போல்! புத்திமான் பலவான் ஆவான்... அன்றும் இன்றும்! உலகைப் புரிதல் நல்லறிவின் முதற்படி! தினமொரு பதிவை விட தேர்ந்தெடுத்த பதிவின் சிறப்பு அருமை!

    ReplyDelete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!